குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் சிறுபான்மையினரின் குடியுரிமையைப் பாதிக்கும் வகையில் ஏதேனும் குறிப்பிடப்பட்டிந்தால், அதைக் காண்பிக்குமாறு ராகுல் காந்திக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பொய்யான வதந்திகளை காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமென்றே பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால், சிறுபான்மையினரின்,குறிப்பாக முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என ஏதாவது ஒரு ஷரத்தில் குறிப்பிட்டுள்ளதா என ஏதேனும் ஒரு பிரிவுக்கு பாதிப்பு இருக்கிறதா, அவ்வாறு இருந்தால் அதை காண்பிக்குமாறு ராகுல் காந்திக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்திருக்கிறார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி, அஸ்ஸாம் மற்றும் பிற மாநிலங்களிலும் ஏராளமான போராட்டங்கள் வெடித்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் மேற்குவங்கத்தில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த நிலையில், ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post