பவானி சாகர் மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு, சிறந்த பராமரிப்புக்கான விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுப்பணித்துறையின் கீழ் இயங்கி வரும் அணைகளின் பராமரிப்பு பணி, அணைகளில் பொருத்தப்பட்ட கருவிகளின் சிறப்பான செயல்பாடு மற்றும் அணைகள் தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களின் தொகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த பராமரிப்புக்கான விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.அணைகள் பாதுகாப்பு இயக்க தலைமை பொறியாளர் தலைமையிலான குழு, ஆய்வு நடத்தி விருதுகளை அறிவிக்கும்.அந்த வகையில், 2016-17-ம் ஆண்டுக்கான சிறந்த அணை விருது பெருஞ்சாணி அணைக்கு கிடைத்துள்ளது. 2017 – 18-ம் ஆண்டுக்கான சிறந்த அணை விருது, பவானி சாகர் அணைக்கு வழங்கப்பட உள்ளது. அணையில் பராமரிப்பு பணி மேற்கொண்ட பல்வேறு நிலை பொறியாளர்களுக்கு ஊக்கத் தொகையும், கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களும் வழங்கி தமிழக அரசு கெளரவிக்கிறது.
Discussion about this post