தமிழக அரசின் விவசாயத் திட்டங்கள் மூலம் பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்து சாதனை புரிந்து வரும் விவசாயிக்கு ஏராளமானோர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சாத்தமங்கலத்தைச் சேர்ந்த புகழேந்தி, தமிழக அரசின் விவசாய திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்து வருகிறார். தனது வயலில் மூலிகைச் செடிகள், வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, பலா போன்ற பல்வேறு மரங்களை இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிரிட்டு வருகிறார். மேலும் ஒன்பது வகையான பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிட்டு விளைபொருட்களைத் தமிழ்நாடு முழுவதும் வணிகம் செய்து வருகிறார்.
இவரது பாரம்பரிய இயற்கை சார்ந்த விவசாயத்தைக் காண நாள்தோறும் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் வந்து போகின்றனர் . அப்படி வருவோருக்குத் திருக்குறள் புத்தகம் வழங்குவதோடு இயற்கை உணவுகளைப் பரிமாறுகிறார். இயற்கை விவசாயம் செய்வதற்கு உதவியாக இருக்கும் தமிழக அரசுக்குப் புகழேந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
Discussion about this post