கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் லட்சக்கணக்காண வண்ண மலர்களை பூத்துக்குலுங்கினாலும், கண்டு ரசிக்க பார்வையாளர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில், அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் இந்த வருடம் 59 வது மலர் கண்காட்சிக்காக லட்சக்கணக்கான மலர் செடிகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வராததால் இந்த வருடம் மலர் கண்காட்சி நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது பிரையண்ட் பூங்காவில் மேரிகோல்டு, ஆஸ்டர், ஆண்ட்ரியம், ஆப்ரிகன் மேரி உள்ளிட்ட லட்சக்கணக்கான மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இத்தனை அழகையும் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் பிரையண்ட் பூங்கா வெறிசோடிக் காணப்படுகிறது.
Discussion about this post