சென்னை புதுவண்ணாரபேட்டையில் பெண்ணுடன் ஏற்பட்ட தவறான தொடர்பால் கற்பூர வியாபாரி கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை திருவொற்றியூரை அடுத்துள்ள புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு அம்மணி அம்மன் திட்ட சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த சேகர் என்பவரை மர்ம நபர்கள் கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கொலையான சேகர் என்பவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் கற்பூர வியாபாரி என்பதும், அவரது, குடியிருக்கும் பகுதியில் பெண்ணுடன் தவறான தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post