மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் சோத்துபாறை அணையில் இருந்து 4 ஆயிரத்து 190 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மதுரை வைகையாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சோழவந்தானிலிருந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடத் தொடங்கியதால், யானைக்கல் தரைப்பாலம் மற்றும் ஓபுளாபடித்துறை தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
நீண்ட நாட்களுக்கு பிறகு இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் ஏராளமானோர் கரையோரங்களில் நின்று ஆர்வமுடன் நீரினை வரவேற்றனர். தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பதால், மக்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு வேலிகள் அமைப்பது, ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தொடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
Discussion about this post