மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் மழையின் அளவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Discussion about this post