கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. அதன் எதிரொலியாக எல்லா அணைகளில் இருந்தும் அதிகமான தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கபினி உள்ளிட்ட அணைகளில் திறந்து விடப்படும் நீரானது, டி.நர்சிபுரம் அணைக்கு அதிகளவில் வந்து சேருவதால், கோவில்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நர்சிபுரம் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு பக்தர்கள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ,டி.நர்சிபுரம் அணைக்கு அதிக அளவில் நீர் வருவதால், காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post