கேரள வெள்ள நிவாரணத்துக்கு கூடுதலாக 3 ஆயிரத்து 48 கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு வழங்க உள்ளது. கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்தது. இதனால் அங்கு வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் 14 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் சிக்கி 488 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு, மத்திய அரசு 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கேரள அரசு கேட்டிருந்தது.
உடனடியாக மத்திய உள்துறை அமைச்சர் 100 கோடி ரூபாய் நிவாரணத்தை கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அறிவித்தார். இதனைதொடர்ந்து, தற்போது கூடுதலாக, 3 ஆயிரத்து 48 கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு வழங்க உள்ளது.
Discussion about this post