அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினர். இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல், ஆகஸ்டு 4-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்திய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Discussion about this post