திருப்புவனம் அருகே பாமக பிரமுகர் கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில், பாமகவின் முன்னாள் செயலாளர் ராமலிங்கம் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சுற்று வட்டார பகுதிகளில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், ராமலிங்கம் கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நிஜாம் அலி, சர்புதீன், முஹம்மது ரிஸ்வான், முகமது ரியாஸ், முகமது அசாருதீன் ஆகியோர் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 20ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, 5 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Discussion about this post