சென்னை வில்லிவாக்கத்தில் முன்விரோதம் காரணமாக கார் ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வில்லிவாக்கத்தில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஆண்டு பாஸ்கர் என்பவரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த புதியவன் என்பவரை பாஸ்கரன் மற்றும் அவரது தம்பி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஜாமீனில் வெளிவந்த பாஸ்கர் புதியவனின் அக்கா மகன்களான சுபாஷ், மற்றும் சுகன் ஆகியோரிடம் தான் கொடுத்த பணத்தை திரும்பத் தருமாறு கேட்டதாகவும், தராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்தநிலையில், சாலையில் நடந்து சென்ற பாஸ்கரனை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியோடினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக பாஸ்கரனை கொலை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Discussion about this post