பெல்ஜியம் நாட்டின் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. 16ஆம் நூற்றாண்டில் குதிரையை பயன்படுத்தி மீன் பிடிப்பது வழக்கமாக இருந்தது. பாரம்பரியமாக கருதப்பட்ட இந்த தொழிலை நினைவு கூரும் வகையில் பெல்ஜியம் மக்கள் இவ்விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். பெல்ஜியம் கடற்கரையில் குதிரையுடன் ஒன்று கூடிய மக்கள் வலைகளை பயன்படுத்தி மீன்களை சேகரிக்க தொடங்கினர். கோடை காலம் முழுவதும் நடைபெற உள்ள இந்த விழாவை காண அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
Discussion about this post