கர்நாடக மாநிலம் மங்களூருவில் அமைந்துள்ள பிரபல கோயிலில் ஜாத்ரா மகோத்சவத்தையொட்டி நடத்தப்பட்ட பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு ஆர்வத்துடன் மீன்பிடித்தனர்.
மங்களூருவில் அமைந்துள்ள செலாத்ரு கண்டிகே தர்மராசு ஸ்ரீ உல்லாயா கோயிலில் ஜாத்ரா மகோத்சவம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆண்டுதோறும் கோயில் அருகில் உள்ள ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டும் ஜாத்ரா மகோத்சவத்தையொட்டி, கோயில் சார்பில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆண்கள் மற்றும் பெண்கள் பேதமின்றி ஆர்வத்துடன் மீன்களை பிடித்த பக்தர்கள், அதை விற்பனை செய்தும், அங்கேயே சமைத்து சாப்பிட்டும் மகிழ்ந்தனர். இந்த மீன்பிடித் திருவிழாவை ஏராளமானோர் பார்வையாளர்களாகவும் கண்டு ரசித்தனர்.
Discussion about this post