மதுரை அருகே நடைபெற்ற பாரம்பரியம் மிக்க மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று மீன் பிடித்து கொண்டாடினர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கீழகள்ளந்திரியில் உள்ள கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. முத்தன்கோயிலுக்கு சொந்தமான பெரியநாயகி கண்மாயில் மீன்பிடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, பெரியநாயகினி கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர். பெரியாறு அணை பாசணக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், இதில் கிராம மக்களால் மீன் குஞ்சுகள் அதிகம் விடப்பட்டு வளர்க்கப்பட்டன. தற்போது மீன்கள் வளர்ச்சியடைந்ததையடுத்து மீன்பிடி திருவிழா நடைபெறும் என தெரிவித்து விழாவை தொடங்கினர்.
Discussion about this post