மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் நெல்லை மாவட்டம் திசையன்விளை கருவாடு சந்தையில் கருவாடு விலை உயர்ந்துள்ளது.
மீன் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்துடன் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடியில் இருந்து திசையன்விளை கருவாடு சந்தைக்கு மீன்கள் கொண்டு வரப்படுவது இல்லை. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தின் மீனவ கிராமங்களான உவரி, கூட்டபனை, கூடுதாழை, இடிந்தகரை உள்ளிட்ட மீனவ பகுதிகளில் இருந்து திசையன்விளை கருவாடு சந்தைக்கு குறைந்த அளவே மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த சூழலில் கருவாடு உற்பத்தியும் சரிந்துள்ளதால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நெத்திலி கருவாடு, தற்போது 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல், சாளை, துப்புவாளை உள்ளிட்ட கருவாடுகளின் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், கருவாடு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post