மீனவர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மிக்க மீன்களை கிடைக்கச் செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நவம்பர் 21 ஆம் தேதி உலக மீன்வள தினமாகும். இதையே மீனவர் தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த மீனவர் தினத்தில், ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூட்ரை பூர்வீகமாகக் கொண்டு ராமேஸ்வரத்தில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக தமிழக அரசு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதில் மூக்கையூர் துறைமுகம் திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முக்கியமான திட்டமாகும். 113 கோடியே 90 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த துறைமுகத்தால், மீனவர்கள் கச்சத்தீவு பகுதிகளுக்கு சென்று மீன்பிடிப்பது தடுக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையின் எதிர் புறத்தில் இருப்பதால் மீனவர்களுக்கு மீன் பிடிக்க செல்வதற்கான நெருக்கடி மற்றும் எல்லை தாண்டி மீன் பிடிப்பது குறைந்துள்ளது. இதனால் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவங்களும் குறைந்துள்ளது.
மூக்கையூர் துறைமுகத்தில் வானிலை தகவல் தொடர்பு மையம், மீன் ஏலக்கூடம், நிர்வாக அலுவலகம், மீனவர் ஓய்வு அறை, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஆகிய பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்திம் மூலம் கரையோரங்களில் கிடைக்கும் மீன்கள் மட்டுமல்லாமல், ஆழ்கடலில் பகுதிகளில் கிடைக்கும் மீன்களும் உடனுக்குடன் பொதுமக்களுக்கு தங்களால் கொடுக்க முடிவதாக மீனவர் கிங்ஸ்டன் தெரிவித்தனர்.
மீனவர்களின் 40 ஆண்டுகால கோரிக்கைகளான மூக்கையூரி திட்டம் செயல்படுத்தப்பட்டதால், சொத்த ஊரில் தொழில் செய்து வருவதாகவும், குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடிவதாகவும் மீனவர் ஜெயராஜ் தெரிவித்தார்.
தரைமேல் பிறந்தாலும் உயிரைப் பணயம் வைத்து கடலில் சென்று மீன் பிடித்து வாழும் இந்த பகுதி மீனவர்களின், பல ஆண்டு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றித் தந்துள்ளது.
மீனவர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.