காதில் எப்போதுமே சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கும் அரியவகை நோயால் பாதிக்கபப்ட்ட இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்து சென்னை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்
சென்னையை சேர்ந்த வெங்கட் என்ற இளைஞர் டின்னிடஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு காதுகளிலும் ஒருவகையான இரைச்சல் கேட்டுக் கொண்டே இருக்கும். இதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அந்த இளைஞருக்கு மைக்ரோவாஸ்குலர் டிகம்ப்ரஷன் முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவிலேயே இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை என எம்.ஜி.எம் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் இதுவரை 50க்கும் குறைவான நபர்களுக்கே இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
Discussion about this post