வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா வங்கதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட் செய்த வங்கதேச அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது.
இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 493 ரன்கள் எடுத்திருந்த போது 2 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜடேஜா 60 ரன்களுடனும் உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 343 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி வலுவான நிலையை அடைந்தது. இன்று 3 ஆம் நாள் ஆட்டம் தொடங்க இருந்த அரை மணி நேரத்திற்கு முன்பாக ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார்.
இதையடுத்து, 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது. அந்த அணி 58.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Discussion about this post