இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது நேற்று நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டர் குக், கீட்டன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். குக் 13 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து ஜென்னிங்ஸ் 42 ரன்களுடன் வெளியேற, தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்திருந்தது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் பேர்ஸ்டோ அரை சதம் அடித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் ஜோ ரூட் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தநிலையில் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை எடுத்தது. சாம் கரன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்திய அணியில், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
Discussion about this post