நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கீட்டதால் 35 ஓவர்கள் வீச முடியாமல் போனது.
இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 2வது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய இந்திய அணி, ரன் குவிக்க முடியாமல் திணறியது. ரிஷப் பண்ட் 19 ரன்களிலும், ரஹானே 46 ரன்களிலும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமாலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Discussion about this post