தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது வரலாறு காட்டும் செய்தி.“சாசன இயக்கம்”, “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” போன்ற இயக்கங்களின் பெருமுயற்சியால் இதற்கான விதை ஆழமாக விதைக்கப்பட்டது.
எல்லா தொழிலாளர்களுக்கும் எட்டு மணிநேர வேலை,எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை உறுதி செய்த தொழிலாளர் தினம் பல்வேறு உலக நாடுகள் போலவே இந்தியாவிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது..
ஆனால் இந்தியாவும் மே-தினமும் சற்று கூடுதல் சிறப்பு வாய்ந்தவை. அவை என்னென்ன? பார்ப்போம்.
1.இந்தியா மே 1, 1927 இல் இருந்துதான் தொழிலாளர் வாரத்தைக் கடைபிடிக்கத் தொடங்கியது. இது பல்வேறு தொழிலாளர் அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட ஊர்வலங்களுடன்I பொது விடுமுறையாக கொண்டாடப்படுகின்றது.
2.மே தினம் இந்தியாவைப்பொறுத்தவரை 2 மாநிலங்களின் பிறந்த தினமும் கூட.
3.மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகியவற்றில், தொழிலாளர் வாரமானது ‘மகாராஷ்டிரா திவ்யாஸ்’ மற்றும் ‘குஜராத் திவ்யாஸ்’ (முறையே, மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் தினம்) என்ற பெயரில் நிகழ்கின்றது. ஏனெனில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் 1960 இல் அதே வாரத்தில் உருவாக்கப்பட்டன.
4.இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
5.இந்தியாவுக்கு இது 92 வது தொழிலாளர் தினமென்றால் , தமிழகத்துக்கு இது 96 வது தொழிலாளர் தினம்
6.பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம.சிங்காரவேலர் 1923 -லேயே சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் முதல் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.
இந்த நாளில் இந்தியாவில் எல்லாரும் எல்லாமும் பெற பாடுபடும் எல்லா தொழிலார்களுக்கும் நியூஸ்ஜே தொலைக்காட்சியின் இனிய தொழிலாளர் தின நலவாழ்த்துகள்..
Discussion about this post