13-வது ஐ.பி.எல். போட்டிகள் துபாய், அபுதாபி, சார்ஷா ஆகிய இடங்களில் நடைப்பெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் கையில் பந்துடன் ஸ்டம்புக்கு அருகே நின்றுகொண்டிருக்கும்போது, பேட்ஸ்மேன் கிரிஸிலிருந்து விலகி நிற்கும் புகைப்படம் வைரலாக பரவியது.
இந்த புகைப்படம் கடந்த ஐ.பி.எல். ஆட்டத்தில் அஸ்வின் மன்கட் முறையில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன் பட்லரை அவுட்டாக்கிய நிகழ்வை நினைவுப்படுத்தியது. அஸ்வினின் மன்கட் அவுட் குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். மேலும் பலர் `இது அறமில்லாத செயல்’ என்றும் விமர்சித்திருந்தனர். நேற்றைய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசினார் அஸ்வின். அப்போது, மறுபுறும் நின்றுக்கொண்டிருந்த பேட்ஸ்மேன் ஃபின்ச் பந்து வீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியே வந்தார். அதை கவனித்த அஸ்வின், பந்து வீசுவதை நிறுத்தி விட்டு அவரை எச்சரிக்கும் விதமாக நடந்துகொண்டார்.
இந்நிலையில் ”முதல் முறை எச்சரிக்கை விடுத்துள்ளேன். இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும், இனி பேட்ஸ்மென்கள் ரன்னர் முனையில் பந்து வீசும் முன்பு கிரீசைத் தாண்டினால் மன்கட் முறையில் அவுட் செய்து விடுவேன், பிறகு என்னைக் குறை கூறாதீர்கள்” என்று அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.
இந்த சீசன் ஆரம்பிக்கும் போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ‘அது கிரிக்கெட் விளையாட்டின் அறத்தை சீர் குலைக்கிறது, அதை அஸ்வின் செய்ய வேண்டாம் என சொல்வேன்’ என கூறியிருந்தார்.
கடந்த முறை அஸ்வினின் இந்த மன்கட் முறையை பல வீரர்கள் எதிர்த்தனர். குறிப்பாக ஷேவாக், சச்சின், தோனி என அனைவருக்கும் அஸ்வினின் செயலை விமர்சனம் செய்தனர். வெளிநாடு வீரர்கள் தரப்பில் இது நியாமான செயல் இல்லை என்ற விமர்சனமும் முன் வைக்கப்பட்டது. நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு மீம்சாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post