காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஞ்சனேயர் பெட்ரோல் பங்க் அருகில் தேர்தல் குறித்த ஆலோசனை மேற்கொள்ள புதிதாக அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு வந்த மர்ம நபர்கள், அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், அதிமுக நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post