வில்லிவாக்கம் லட்சுமிபுரத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே காளியப்பன் என்பவருக்குச் சொந்தமான பழைய பொருட்கள் கிடங்கு உள்ளது. நேற்றிரவு அந்தக் கிடங்கில் உள்ள பொருட்களில் திடீரெனத் தீப்பற்றியது. அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் தீ பரவி மளமளவென எரிந்தது. இது குறித்துத் தகவலறிந்து வில்லிவாக்கம், ஜெஜெ நகர், அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
Discussion about this post