மலையிலிருந்து தீப்பிழம்பாய் அருவி கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் யோஸ்மெட் என்ற தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஒரு சில நாட்களில் மட்டும் சூரியன் மறையும் நேரத்தில், சூரியனின் ஒளி அருவியின் மேல் படும் போது மஞ்சள் நிறத்தில் அருவி கொட்டுமாம்.
அந்த வகையில் தற்போது மலையில் இருந்து தீப்பிழம்பாய் அருவி கொட்டும் வீடியோ கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. இதனை பார்த்த பலரும் இயற்கையை வர்ணிக்க வார்த்தை இல்லை என்று வியந்து வருகின்றனர்.
மேலும் இந்த நெருப்பு அருவியானது பெரும்பாலும் ஜனவரி மாதத்தின் கடைசியில் மற்றும் பிப்ரவரி மாதத்திலும் மட்டுமே நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது .
“Firefall” at Horsetail Fall in Yosemite National Park, California, looks like a scene from a fantasy movie. But, it is an ordinary waterfall, which is illuminated by the sunset, that gives it a fiery glow. pic.twitter.com/kP2aFmM6Cg
— Domenico Calia (@CaliaDomenico) January 19, 2020
Discussion about this post