சென்னை வேப்பேரியில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், மின்சார பகிர்வின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஊழியர்கள் காயமடைந்தனர்.
வியாசர்பாடி மின் நிலையத்தில் இருந்து வரக்கூடிய மின்சாரம் இங்கு பகிரப்பட்டு பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, பெரியமேடு, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். இன்று காலை மின் பகிர்வின் போது ஒரு பகுதியில் ஏற்பட்ட விபத்தால் தீ பரவியது. தீ பரவாமல் இருக்க அப்பகுதி முழுவதும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காயமடைந்த 3 ஊழியர்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
Discussion about this post