திருப்போரூர் அருகே கோவூர் கிராமத்தில் உள்ள தனியார் மரக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மரக் கட்டைகள் எரிந்து சாம்பலாகின.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவூர் கிராமத்தில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான மரக் கிடங்கில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பிளைவுட்கள் எரிந்து சாம்பலாகின. தீ விபத்துக்கு காரணம் மின் கசிவா? அல்லது வேறெதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post