டெல்லியில் 3 மாடிக் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர்.
மேலும் மூவர் கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராரி என்னுமிடத்தில் உள்ள கட்டடத்தில் நள்ளிரவில் எரிவாயுக் கசிவால் தீவிபத்து ஏற்பட்டு அங்கிருந்த துணிக்கிடங்குக்கும் பரவியதால் கொழுந்து விட்டு எரிந்தது.
ஒரே ஒரு வழி மட்டும் இருந்த நிலையில் கட்டடத்தில் இருந்தவர்கள் கீழிறங்கித் தப்பி ஓட முடியவில்லை. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post