திருப்பூர் அருகே ரசாயன குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில், அதிஷ்டவசமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தப்பியது.
திருப்பூர் எஸ்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர், சாய ஆலைகளுக்கு ரசாயனங்களை விற்பனை செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடு காலி பேரல்களில், அதிக வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதனைக் கண்ட ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனடியாக ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இவ்விபத்தில் அருகில் இருந்த பல லட்சம் மதிப்பிலான ஹைட்ரஜன் பெராக்ஸைடு ரசாயனங்கள் தப்பியது.
Discussion about this post