கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை துணை மின் நிலையத்தில், திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் மின்விநியோகம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிங்காரப்பேட்டை துணை மின் நிலையத்தில், இரவு பயங்கர வெடிச்சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்புகளை துண்டித்ததோடு தீ மேலும் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலுர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது . துணை மின் நிலையத்தை சீர் அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post