அறந்தாங்கி அருகே கூட்டுறவு நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த துரையரசபுரத்திலுள்ள கூட்டுறவு நூற்பாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விடுமுறையை முன்னிட்டு ஆலை மூடியிருந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல் கோன் மற்றும் பஞ்சு எரிந்து சேதமானது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க முயற்சித்தனர். தீ கட்டுக்குள் அடங்காததை தொடர்ந்து ஆவுடையார் கோவில் மற்றும் கீரமங்களம் தீயணைப்பு துறையினரும் வரவழைக்கப்பட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்து காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post