திருப்பத்தூர் அருகே திருமணத்திற்கு வைத்திருந்த 10 லட்ச ரூபாய் பணம் மற்றும் 14 சவரன் நகை தீயில் கருகி நாசமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அங்கநாத வலசை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு காதணி விழாவிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கோவிந்தராஜ் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் கோவிந்தராஜ் தன் தங்கை மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 10 லட்ச ரூபாய் பணமும் 14 சவரன் நகையும் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post