சென்னையில் தீயணைக்கும் கருவிகள் விற்பானையகத்தில், ஏற்பட்ட தீ விபத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
மும்பையை தலைமையகமாக கொண்ட பிரபல தனியார் தீயணைப்பு கருவிகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் கிளை சென்னை கீழ்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. கடை பூட்டப்பட்டிருந்த நிலையில், இரவு வெடிக்கும் சத்தத்துடன் புகை மூட்டம் வெளியே வந்தது. இதனையடுத்து அப்பகுதியிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்க முற்பட்டனர். கடையின் உள்ளே இருந்த வேதிப்பொருகளின் காரணமாக தீ வேகமாக பரவியது. இதனால், மேலும், 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில், சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்விபத்து குறித்து காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post