வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் மின்மோட்டார்களைப் பொருத்தி நீர் எடுத்தவர்களின், மின்மோட்டார்கள் அபராதத்துடன் பறிமுதல் செய்யப்பட்டன. நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட ஆறுகாட்டுத்துறை, சேதுரஸ்தா பகுதிகளில் குடிநீர் குழாய்கள் மூலம் மக்களுக்கு முறையாக நீர் செல்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, விதிமுறைகளை மீறி ஆறுகாட்டுத்துறையில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 3 மின்மோட்டார்களும், சேது ரஸ்தாவில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 2 மின்மோட்டார்களும் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஒவ்வொரு மின்மோட்டார்களுக்கும், தலா 5 ஆயிரத்து 500 ரூபாய் வீதம், 5 நபர்களிடத்தில் 27ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கபட்டது. அதேபோல் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கக் கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.
Discussion about this post