வழக்கறிஞர் தியாகராஜன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு வசதியை உருவாக்க வேண்டும் என 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தார். ஆனால், தமிழக அரசின் உத்தரவை யாரும் முறையாக பின்பற்றவில்லை என்றும் தனது மனுவில் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என விதி உள்ள நிலையில், அண்மைக் காலமாக எந்த ஒரு கட்டடத்திலும், மழைநீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தப்படுதவில்லை என்று அவர் தெரிவித்து இருந்தார். எனவே, மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தியாகராஜன் வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் , நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.
Discussion about this post