சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் மேலும் சில விலங்கின் எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
கீழடி, கொந்தகை, மகரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழகத் தொல்லியல் துறை மூலம் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் ஏற்கனவே சுடுமண்ணாலான பானைகளின் ஓடுகள், பானைகள், செங்கற்களால் ஆன கட்டுமான சுவர்கள் உட்பட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழங்காலத்து எடைக்கற்கள் மற்றும் விலங்கின் எலும்பு ஒன்று கிடைத்த நிலையில், தற்போது மேலும் ஒரு விலங்கின் எலும்பு கண்டறியப்பட்டுள்ளது. முழுமையான ஆய்வுக்குப் பிறகே எந்த வகையான விலங்கு, எத்தனை ஆண்டுகள் பழமையான எலும்பு என்பது தெரியவரும் என, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடயே, கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகளில் ஈடுபடக் கூடிய பணியாளர்கள் தங்கும் இடத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அருங்காட்சியகம் கட்டும் பணி துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post