நிதிநிலை அறிக்கையில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, நீண்ட கால இலக்குடன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். 5 ஆண்டுகால இலக்குடன் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்கள் எளிதாக வாழ தேவையான அனைத்து அம்சங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்று இருப்பதாக அவர் உறுதியளித்தார். விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், உயரிய இலக்கை அடைவதற்கான கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
Discussion about this post