ஹிரோஷிமாவில் நடைபெற்ற பெண்கள் உலக ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தியது.
பெண்கள் உலக ஹாக்கி தொடரின் இறுதிசுற்று போட்டி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்றது. அரையிறுதிப் போட்டியில் சிலியை வீழ்த்தியதன் மூலம் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதிப்பெற்ற நிலையில், இறுதி ஆட்டத்தில் ஜப்பானுடன் நேற்று மோதியது.
ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை ராணி ரம்பால் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலாக 11-வது நிமிடத்தில் ஜப்பான் கோல் அடித்தது. 45-வது மற்றும் 60-வது நிமிடங்களில் இந்தியாவின் குர்ஜித் கவுர் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என ஜப்பானை வீழ்த்தியது.
பெண்கள் உலக ஹாக்கி தொடரின் இறுதிச்சுற்றில் இந்திய அணி வென்றுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இந்த வெற்றி ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்தும் என்றும் மேலும் பல பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
Discussion about this post