குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து, வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின்படி வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் 11 ஆண்டுகள் குடியிருந்தால் அவர் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர் ஆகிறார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த இந்து, சமண, பவுத்த, பார்சி, கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 6 ஆண்டுகள் குடியிருந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து வடகிழக்கு மாநிலங்களின் மாணவர் அமைப்பு, அசாம் மாணவர் அமைப்பு ஆகியவை சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. குவகாத்தியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதுடன் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதேபோல் ஜோர்காட், மோரிகான், ஜோர்காட் ஆகிய நகரங்களிலும் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post