‘சர்கார்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன் நடிகர் விஜய், கலாநிதிமாறன், இருவரிடையே மிகப்பெரிய மோதல் வெடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘சர்கார்’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமை 118 கோடி ரூபாய்க்கு தேனாண்டாள் நிறுவனம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. ‘மெர்சல்’ படத்தை வெளியிட்ட, தேனாண்டாள் நிறுவனத்திற்கு 30 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனை ஈடுகட்டுவதற்காக ‘சர்கார்’ படம் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் முழுத் தொகையை தேனாண்டாள் நிறுவனம் சன் பிக்சர்சுக்கு வழங்காததால், தீபாளிக்கு ரிலீஸ் செய்யாமல் , படத்தை நிறுத்தி வைக்கலாம் என சன் பிக்சர்ஸ் தரப்பில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விஜயை தொடர்பு கொண்ட, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர், தேனாண்டாள் நிறுவனம் முழுத் தொகையை வழங்காவிட்டால், படம் அடுத்தவாரம் தான் திரைக்கு வரும் என தங்களது சேனலில் செய்தி வெளியிடப்படும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த விஜய், படத்தை சுமூகமாக வெளியிடுமாறு, இரு தரப்பினரையும் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து தேனாண்டாள் நிறுவனத்தின் தலைவர் ராமநாராயணனின் மகன் முரளியை அழைத்த சன் பிக்சர்ஸ், முழு பணத்தை தரும் வரை, அதற்கு நிகரான சொத்துக்களை எழுதித் தருமாறு கேட்டதாகவும் அவரும் அதுபோன்று எழுதிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளியன்று, படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு விஜய்க்கு சன் டிவி அழைப்பு விடுத்த நிலையில், அதனை விஜய் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.
ராமநாராயணன் கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமானவர் என கூறப்படும் நிலையில், கலாநிதி மாறன் அவரையே மிரட்டி பேரம் பேசியதும், விஜயை மிரட்டியதாக கூறப்படும் செய்தியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post