மியான்மரில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், சிக்கி 50 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் மரகதக்கல் சுரங்கம் உள்ளது. இங்கு இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஏற்கனவே கனமழையால் நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டு, மண் குவியல் குவியலாக தொழிலாளர்கள் மீது விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், 50 தொழிலாளர்களின் சடலங்களை மீட்டனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அச்சப்படுகிறது.
Discussion about this post