காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஐந்தாவது மாநில சிலம்பப் போட்டியில், 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் பங்குபெற்றனர்.
காஞ்சிபுரத்தில், தனியார் பள்ளியும், தமிழ்நாடு சிலம்பம் தற்காப்புகலை கழகமும், காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பப் பயிற்சி மையமும் இணைந்து, ஐந்தாவது மாநில சிலம்பப் போட்டியை நடத்தினர். சிலம்ப ஆசான் தா. பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளராக மஞ்சூரியா குங்பூ சர்வதேச தலைவர் உள்ளிட்டோருடன், 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய கலையான வர்மம், சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே இந்த சிலம்பப் போட்டி நடத்தப் பட்டதாகவும், தற்போது போதைக்கு அடிமையாக உள்ள சில இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் வாழ்க்கையில் மேம்படுத்திக் கொள்ளவும் சிலம்பம் போன்ற பயிற்சிகள் பேரளவில் உதவுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post