கள்ளழகர் வைகை ஆற்றில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சியம்மன் திக் விஜயம், உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஏப்ரல் 17 ஆம் தேதி மீனாட்சி திருக் கல்யாணமும், ஏப்ரல் 18 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று நடைபெற்றது. கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது, பக்தர்கள் கோவிந்த என்ற முழக்கத்திடன் வரவேற்றனர்.
Discussion about this post