கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து விருத்தாசலத்திற்கு ஆயிரத்து 320 மெட்ரிக் டன் உரங்கள் சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டன.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் குறுவை நெல் பருவ சாகுபடி முடிவடைந்து சம்பா நெல் சாகுபடியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் சென்னை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து உரங்களை இறக்குமதி செய்து வருகிறது. அதன்படி, கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஆயிரத்து 320 மெட்ரிக் டன் உரங்கள் சரக்கு ரயில் மூலம் விருத்தாசலத்துக்கு கொண்டு வரப்பட்டன. அவை லாரிகளில் கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள மூட்டைகள் அரசு சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
Discussion about this post