தெலுங்கானா மாநில முதவலமைச்சரின் செயலாளராக பணியாற்றி வருபவர் பெண் ஐஏஎஸ் அதிகாரியான சுமிதா சபர்வால். ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு அத்துமீறி நபர் ஒருவர் நுழைந்ததை அறிந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி, இதுகுறித்து பாதுகாவலருக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக வீட்டில் சோதனை செய்யப்பட்டபோது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் துணை தாசில்தாராக பணியாற்றி வரும் ஆனந்த் என்பது தெரியவந்தது. ஆனந்தையும், அவரை அழைத்து வந்த அவரது நண்பரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பெண் ஐஏஎஸ் அதிகாரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில். தைரியம் இருந்ததால் தப்பித்ததாகவும், பெண்கள் எப்போதும்பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவசர காலத்தில் 100க்கு டயல் செய்யவும் என பதிவிட்டுள்ளார்.
Discussion about this post