பாதுகாப்பு படைகள் 500 கோடி ரூபாய் மதிப்பில் போர்க் கருவிகளை வாங்கிக் கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்னை நிலவுவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இருதரப்பு ராணுவ வீரர்கள் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து எல்லையில் ராணுவம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அவசர தேவையை கருத்தில் கொண்டு முப்படைகளும், தங்களுக்கு தேவையான போர் தளவாடங்களை வாங்கும் அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது. 500 கோடி ரூபாய் வரை முப்படைகளும் போர்க் கருவிகளை வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முப்படைகளும் தங்களுக்கு தேவையான போர் கருவிகளை வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post