நதிநீர் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க , “ஒரே நாடு -ஒரே தீர்ப்பாயம்” திட்டத்தை கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 9 தீர்ப்பாயங்களுக்கு பதிலாக, ஒரே தீர்ப்பாயத்தை அமைத்து, இரண்டு ஆண்டுகளில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வகையில், மசோதா தயார் செய்யப்பட்டுள்ளது. நதிநீர் பிரச்சனையை தீர்க்க தனி அலுவலகம் அமைத்து, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க, தீர்ப்பாயம் முயற்சிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் கீழ் செயல்படும் கமிட்டிகள், பிரச்சனையை தீர்க்க முடியவில்லை எனில், தனி அமர்வு உருவாக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post