வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உள்ளம் உருக பாடியவர் வடலூர் ராமலிங்க வள்ளலார். புழால் உண்ணாமை, சிறு உயிரினங்களுக்கும் தீங்கு செய்யாமை போன்ற உன்னத குணங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தார். சுத்த சன்மார்க்க சங்கத்தை ஆரம்பித்து அனைவருக்கும் உணவு வழங்கி வந்த அவரின் நினைவு தினமான பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் மதுபானம் விற்கத்தடை விதித்துள்ளது சென்னை மாநகராட்சி.
இதனையொட்டி சென்னை மாநகராட்சியின் ஆட்சியர் அறிவிப்பானது, வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை ஒட்டி பிப்ரவரி 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள், கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், ஓட்டல்களைச் சேர்ந்த பார்கள் உள்ளிட்டவை கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில் மதுபான விற்பனை விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post