பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஒரு இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக ரஷ்ய பிபிசி நிறுவனம் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.உலகம் முழுவதும் கோடிக்கணக்காண பயனாளிகள் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 5 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துன.இந் நிலையில் 81,000 பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மேசேஜ்கள் ஒரு இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 120 மில்லியன் பயனாளிகளின் தகவல்கள் ஹேக்கர்களிடம் இருப்பதாக தெரியவந்துள்ளது.இது குறித்து ஆய்வு நடத்திய ரஷ்யா பிபிசி நிறுவனம், விற்பனைக்கு வந்த தகவல்களை பயனாளிகளிடமே கேட்டு உறுதி செய்துள்ளது.குறிப்பாக ரஷ்யா,உக்ரைன், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள மக்களின், பேஸ்புக் பக்கத்தை ஹேக்கர்கள் சட்டவிரோதமாக விற்பனைக்கு கொடுத்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம், பாதுகாப்பற்ற பிரவுசர்களை பயன்படுத்திய பயனாளிகளின் தகவல்கள் வெளிவந்திருக்கலாம் என்றும் இது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
Discussion about this post